கடந்த ஆண்டில் மட்டும், 64.2 கோடி ரூபாயை, சைபர் கிரைம் மோசடி கும்பல் பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி..
புதுச்சேரியில், சைபர் கிரைம் போலீசார் இணைய வழி மூலம் நடக்கும், மோசடிகள் பற்றி பல் வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அப்படி இருந்தும் தினத்தோறும் பொதுமக்கள் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்து வருகின்றனர்.
பொது மக்களை மும்பை சைபர் கிரைம் போலீசார் பெயரை கூறி, பார்சலில் போதைப் பொருள் வந்துள்ளது என, மிரட்டுவது. வங்கியில் இருந்து பேசுவதாகவும், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு புதுப்பிக்க வேண்டும் எனவும், அதற்காக பாஸ்வேர்டு, ஓ.டி.பி., (otp) எண்ணை வாங்கி, பணம் பறிப்பது,பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என பல்வேறு வகையில் மோசடி கும்பல், பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றி வருகின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் ஆன்லைன் மூலமாக மோசடி கும்பல், 64.2 கோடி ரூபாயை பொது மக்களை ஏமாற்றி அபகரித்துள்ளனர். இதில், பெண்களுக்கு எதிரான 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 12 வழக்குகளில், குற்றவாளிகளை கைது செய்து, 11 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
No comments